உள்ளூர் செய்திகள்

மக்களுக்கு சென்றடையக்கூடிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது- அமைச்சர் பேச்சு

Published On 2023-05-08 09:05 GMT   |   Update On 2023-05-08 09:05 GMT
  • மதுரையில் 342 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

மதுரை

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் இன்று நடந்தது.

கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி,மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 342 பயனாளி களுக்கு ரூ.2 கோடியே 62 லட்சத்து 21 ஆயிரத்து 116 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொள்கை வேண்டும். சமூகநீதி, சமத்துவம், எல்லோருக்கும் வாய்ப்பு, கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்று முதல்-அமைச்சர் கூறும் அடிப்படை இலக்கு எங்கள் அரசின் முக்கியமாகும்.

நிதி பற்றாக் குறையில் இருந்த நிலையை மாற்றி நிதி பற்றாக்குறையை குறைத்து தி.மு.க. அரசு மேலும் ஒரு லட்சத்திற்கும் மேலான புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இது தவிர சட்டமன்ற உறுப்பி னர்கள் மூலம் உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயன்களை பெற்று தருவதும் கடமையாகும்.

அரசின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க நான் எனது சொந்த பணத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்து தந்திருக்கிறேன். 54 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு உதவி செய்திருக்கிறேன். 18 மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர நகரும் வண்டிகளுக்கு ஏற்பாடு செய்து தந்திருக்கிறேன்.

தமிழக அரசு எல்லா வகையிலும் மக்களுக்கு சென்றடைய கூடிய திட்டங்களை செய்து வரு கிறது. ஆனால் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி மிசா பாண்டி, வக்கீல் பொன்வசந்த், மேலமாசிவீதி சரவணன், ராஜேந்திரன், ஐ.டி.விங் சதாம் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News