உள்ளூர் செய்திகள்

ரெயில்வே தேர்வில் முறைகேடா?

Published On 2022-09-21 06:21 GMT   |   Update On 2022-09-21 06:21 GMT
  • ரெயில்வே தேர்வில் முறைகேடா? என மதுரை அதிகாரி விளக்கம் அளித்தனர்.
  • தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

மதுரை

மத்திய ரெயில்வே துறையில் தொழில்நுட்ப உதவியாளர், ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர் ஆகிய வேலைக்கான போட்டித் தேர்வு கணினி மூலம் நடந்து வருகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்வுகள் முடிந்து விட்டன.

தற்போது 4-ம் கட்ட தேர்வு நடந்து வருகிறது. ரெயில்வே தேர்வில் முறைகேடு நடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மதுரை ரெயில்வே அதிகாரி கூறுகையில், "ரெயில்வே தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், கேள்வித்தாள்கள் 256 அளவு இலக்க குறியீடுடன் கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரருக்கான தேர்வு மையம், இருக்கை ஒதுக்கீடு ஆகியவற்றில் கூட வரிசை தவிர்க்கப்பட்டு உள்ளது. வினாத்தாளிலும் கேள்விகள் மற்றும் 4 விருப்ப விடைகள் வரிசையாக இருக்காது.

ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசை இல்லாத கேள்விதாள்கள் கணினியில் தோன்றும். தேர்வுக்கான விடைகளை யாராலும் வழங்க முடியாது. அப்படி யாராவது கூறினால், அது ஆதாரமற்றது.

தேர்வு நடக்கும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஆள் மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது. கடந்த 19-ந் தேதி நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே பணிகளுக்கான தேர்வு, நேர்மையான முறையில் நடந்து வருகிறது.

குறுக்கு வழியில் ரெயில்வே வேலை வாங்கித் தருவதாக, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரெயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்து இருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News