உள்ளூர் செய்திகள்

'பேட்ச் ஒர்க்' பள்ளங்களால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

Published On 2023-11-07 07:44 GMT   |   Update On 2023-11-07 07:44 GMT
  • ‘பேட்ச் ஒர்க்’ பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
  • முக்கிய சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

மதுரை

மதுரை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக புதிய சாலை பணிகள் முழுமையாக நடைபெற வில்லை. இதனால் பெரும் பாலான சாலைகள் குண் டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஒப்பந்ததா ரர்களின் தரமற்ற பணி களால் தற்போது போடப் படும் சாலைகளின் ஆயுட் காலம் என்பது சில மாதங்கள் மட்டுமே.

இதனால் புதிய சாலை கள் கூட ஒரு சில நாட்களில் படுமோசமாக மாறி விடுகிறது. இதனை அதிகா ரிகளும், மக்கள் பிரதி நிதிகளும் கண்டுகொள்வ தில்லை.

மதுரை நகரில் பெரியார் பஸ் நிலைய பகுதி, திருப்ப ரங்குன்றம் சாலை, பழங்கா நத்தம், ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், அரசரடி, செல்லூர், கண்மாய்கரை ரோடு, காமராஜர் சாலை, டவுன்ஹால் ரோடு, மாசி வீதிகள், மாரட் வீதிகள், பழைய குயவர் பாளையம் ரோடு, ஆணையூர், கூடல் நகர், குலமங்கலம் ரோடு, ஆலங்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, மீனாட்சி நகர், தபால்தந்தி நகர் உள்ளிட்ட 90 சதவீத சாலை கள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சாலைகளில் ஏற்பட் டுள்ள பள்ளங்க ளால் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் செல் பவர்கள் அடிக்கடி விபத் தில் சிக்குகின்றனர். மழை காலங்களில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.

மதுரை நகரில் சாலைகள் பராமரிப்பு குறித்து பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை நகரில் முக்கிய சாலைகளில் பேட்ச் ஒர்க் (ஒட்டு வேலை) தீவிரமாக நடக்கிறது. சாலைகளை முழுமையாக தோண்டி புதிய சாலைகளை போடாமல் பள்ளம் ஏற்பட் டுள்ள பகுதிகளில் மட்டும் தார் கலவைகளை போட்டு சமப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனால் பயனில்லாமல் உள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளது. சாலைகள் ஒட்டுபோட்ட இடத்தில் தரமான கலவைகள் பயன்படுத்தாததால் சிறிய மழைக்கே அவைகள் பெயர்ந்து கரைந்தோடி விட்டது. இதனால் அரசின் நிதி வீணாக்கியதை தவிர எந்த பலனும் இல்லை. தரமற்ற சாலைகளால் மதுரை நகர வாசிகளுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பது தெரிய வில்லை.

அண்மையில் வெளி யான ஒரு படத்தில் நடிகர் யோகிபாபு புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் பணிக்கு செல்வார். அதில் கட்டிடங்கள் பெயர்ந்து வரும். மதுரை நகர சாலைகளில் மேற் கொள்ளப்பட்ட பேட்ச் ஒர்க் பணி அந்த காட்சியை நினைவூட்டுவதாக உள்ளது.

Tags:    

Similar News