உள்ளூர் செய்திகள்

2 அமைச்சர்கள் இருந்தும் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டு

Published On 2022-07-08 09:51 GMT   |   Update On 2022-07-08 09:51 GMT
  • மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டியள்ளார்.
  • மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதிலும் முறையாக பணிகள் நடை பெறவில்லை.

மதுரை

மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் காலானை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்ட பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை செல்லூர் ராஜூ வழங்கினார்.இதை தொடர்ந்து அவர் கூறிய தாவது:-

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளரை இன்று சந்தித்து பொதுமக்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளோம்.மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதிலும் முறையாக பணிகள் நடை பெறவில்லை.

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் அதிக அளவில் தண்ணீர் இருந்தும் மதுரை மக்களுக்கு குடிநீரை போதுமான அளவிற்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 4 நாட்க ளுக்கு ஒரு முறை சில வார்டு களுக்கு குடிநீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதனால் பழைய குழாய்களில் கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சியான நாங்கள் சொல்வதை விட தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகளவில் புகார் தெரி வித்துள்ளனர். நாங்கள் கோரிக்கை வைத்தால் அரசிய லுக்காக செய்கிறார் கள் என்பார்கள். ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சிகளே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளது.

மதுரையில் 2 அமைச்சர் கள் இருக்கிறார்கள்.நிதி மற்றும் பத்திரப்பதிவு துறைகளை வைத்திருக்கும் அந்த அமைச்சர்கள் மதுரைக்கு எந்த ஒரு புதிய திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தப்ப டவில்லை. கலைஞர் நூலகம் மட்டுமே பணிகள் நடக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளிலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது.

எனவே மாநகராட்சி ஆணையாளர் மத்திய-மாநில அரசு துறைகளில் இருந்து மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயை உடனடியாக பெற்று நிதி ஆதாரத்தை பெருக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. வார்டுகளில் இந்த பணிகளை செய்வ தில் பாரபட்சம் காட்டப் பட்டு வருகிறது. இந்த நிலையை அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த 96-ம் ஆண்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேர் இருந்தோம். அப்போதைய மேயர் குழந்தைவேலு எங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தார். ஆனால் இப்போது 15 கவுன்சிலர்கள் அ.தி.மு.க. சார்பில் இருந்தும் மேயர் மாமன்றத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தர வில்லை. இருக்கை ஒதுக்கீடு மற்றும் அலுவலகம் தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுரை மாநகராட்சி பகுதி களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை உடனடியாக நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். எனவே மதுரை மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News