மின்கட்டண உயர்வை திரும்பபெற த.மா.கா.வினர் கலெக்டரிடம் மனு
- மின்கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என கலெக்டரிடம் த.மா.கா.வினர் மனு கொடுத்தனர்.
- மின் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேைல பாய்ச்சுவதாக உள்ளது.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜாங்கம் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கடந்த 3,4 வருடங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் நசிந்து ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் வீட்டு வரி, ெசாத்துவரியை தமிழக அரசு உயர்த்தியது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேைல பாய்ச்சுவதாக உள்ளது.
மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் கூறுகையில் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சாரவாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்றும் சொல்லி ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த அரசு வாட்டி வதைக்கிறது. எனவே தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் லக்கி மைதீன் பாட்சா, சிலுவை, பைரவமூர்த்தி, மணி, நடராஜன், சீனிவாசன், பிரேம்குமார், எஸ்.பி.ஆறுமுகம், சிவசுந்தரம், மீனா செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.