உள்ளூர் செய்திகள்
பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
மதுரை
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன.
புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த பழக்கடைகளை அகற்ற முற்பட்டனர்.
அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.