உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க கோரிக்கை

Published On 2022-08-09 08:32 GMT   |   Update On 2022-08-09 08:32 GMT
  • குடியிருப்பு பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது.

மேலூர்

மேலூர் அருகே உள்ள அ. வல்லாளபட்டி பஸ் நிலையம், செட்டியார்பட்டி சண்முகநாதபுரம், அரியப்பன்பட்டி சிலுப்பி பட்டி, முஸ்லிம் தெரு உள்ளிட்ட 7-வது வார்டு முதல் 15-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது.

குரங்குகள் வீடுகளில் புகுந்து பொருட்களை தூக்கி செல்வதும், கடைகளில் வெளியே தொங்கும் பொருட்களை எடுத்துச் செல்வதும், பைகளை கொண்டு செல்பவர்களை கடிப்பது போல் சென்று பறித்துச் செல்வதும், வாடிக்கையாகி வருகிறது. குரங்கினால் பொதுமக்கள் படும் அவஸ்தையை கண்டு வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மதுரை மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்று வள்ளாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தார்.

அவருடன் தி.மு.க. பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் ஆகியோர் சென்றனர்.

Tags:    

Similar News