- மதுரையில் கன மழை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டம்முழுவதும் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அலங்கா நல்லூர், கள்ளந்திரி, வாடிப்பட்டி உள்ளிட்ட முல்லைப் பெரியாறு வாய்க்கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் 52 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மழையளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சிட்டம் பட்டி- 27
கள்ளந்திரி-12
தனியாமங்கலம்-41
மேலூர் -57
சாத்தையாறு அணை- 5
வாடிப்பட்டி-14
திருமங்கலம் -52
உசிலம்பட்டி -14
மதுரை வடக்கு -24
தல்லாகுளம்-35
விரகனூர்-12
விமான நிலையம்- 21
இடையபட்டி-31
புலிப்பட்டி-39
சோழவந்தான்-30
மேட்டுப்பட்டி-8
குப்பனம்பட்டி-20
கள்ளிகுடி-66
பேரையூர் -18
ஆண்டிப்பட்டி-27 முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,132 கனஅடி தண்ணீர் வருகிறது.
அணையில் இருந்து 2,016 கன அடி தண்ணீர் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது. வைகை அணையில் நீர்மட்டம் 59.38 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி க்கு 1,546 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை குடிநீர் விநியோகத்திற்காகவும், விவசாய தேவைகளு க்காகவும் 69 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.