உள்ளூர் செய்திகள்

பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.265 கோடி பயன்படுத்தப்படவில்லை

Published On 2023-06-07 08:41 GMT   |   Update On 2023-06-07 08:41 GMT
  • பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.265 கோடி பயன்படுத்தப்படவில்லை.
  • பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.

மதுரை

மதுரையைச் சார்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் கூறியிருப்ப தாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு முதல் பழங்குடியினர் நலத்துறைக்கென்று பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பழங்குடி யினர் ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றிய மைக்கப்பட்டு புதிய அர சாணை வெளியிடப் பட்டது.

அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் தலைவராக கொண்டு அவரின் கீழ் செயலர், இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர்கள், பழங்குடியின அலுவல்சாரா உறுப்பினர்கள், பழங்குடியினர் அல்லாத அலுவல்சாரா உறுப்பினர்கள் என்று மொத்தம் 20 பேர் கொண்ட நிபுணர்கள் குழு 2018 பிப்ரவரி மாதத்தில் நியமிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1.2.2021 அன்று இந்த மன்றத்தின் பதவி காலம் முடிவடைந்து. அதன் பின்னர் 27 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இன்றுவரை ஆன்றோர் மன்றத்திற்கான கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனை தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்கு நரகத்தின் பொது தகவல் அலுவலர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

வீட்டு மனைப்பட்டா, தாட்கோ கடன், குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வழி அமைத்தல், கல்வி நிலையங்கள் மருத்துவமனை அமைத்தல் போன்ற முக்கிய தேவை களை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவது ஆன்றோர் மன்ற உறுப்பி னர்களின் பணியாகும்.

இந்த நிலையில் ஆன்றோர் மன்றம் செயல் படாமல் உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.சான்றாக தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.265 கோடி நிதி பயன்படுத்தாமல் அரசு கஜானாவிற்கே திருப்பி ஒப்படைப்பு செய்யப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News