உள்ளூர் செய்திகள்

மதுரை கிழக்கு ஒன்றியம் வெள்ளியங்குன்றம் கிராமத்தில் புதிய ரேசன் கடையை அமைச்சர் மூர்த்தி திறந்துவைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அருகில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன்,மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலாநிதி,யூனியன் சேர்மன் மணிமேகலை உள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவி

Published On 2023-08-04 08:29 GMT   |   Update On 2023-08-04 08:29 GMT
  • மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவி- ரூ.3¼ கோடி மதிப்பில் 24 திட்ட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
  • ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரூ. 3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் முடி வுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நேரடியாக அனைத்து பகுதி கிராம மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும் பொது மக்களின் கோரிக்கை களை நிறை வேற்ற வலியுறுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி 24 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

காலை 7 மணி அளவில் மாங்குளம் கிராமத்தில் ரூ. 70 ஆயிரம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராம சாவடியை அமைச்சர் திறந்து வைத்தார். அதன் பின்னர் சின்ன மாங்குளம் கிராமத்தில் முதலமைச் சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை போடுவதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

மாத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டத்தை திறந்து வைத்தார்.

வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உணவு தானியங்கி சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார்.

அதே போன்று அரும்பனூர் ஊராட்சியில் அழகர் கோவில் சாலை சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.60ஆயிரம் மதிப்பீட்டில் தாமரைப் பட்டி, காயம்பட்டி கிரா மத்தில் புதிய நாடக மேடையை திறந்து வைத்தார்.

பின்னர் இதேபோன்று கொடிக்குளம், திருமோகூர், ராஜாக்கூர், வரிச்சியூர், களிமங்கலம், குன்னத்தூர், சக்குடி, கார்சேரி, சக்சி மங்கலம், கருப்பாயூரணி போன்ற பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம் மாவட்ட ஊராட்சி நிதி ஒன்றிய பொது நிதி, ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மாவட்ட ஊராட்சி நிதி போன்ற திட்டத்தின் கீழ் நீர் தேக்க தொட்டி கிராம சாவடி அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கடை, உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் பயணிகள் நிழற்குடை என மொத்தம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 24 திட்டப் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10 கோடி கடனுதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் தலைவர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சூரிய கலா கலாநிதி, ஒன்றிய சேர்மங்கள் வீரராகவன், மணி மேகலை, தி.மு.க. நிர்வாகிகள் சோமசுந்தர பாண்டியன், அழகு பாண்டி, பால சுப்ரமணியன், திருப்பாலை சசிகுமார், மருதுபாண்டி, வழக்கறிஞர் கலாநிதி, நேருபாண்டி உள்பட ஊராட்சி தலைவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News