அன்னை பாத்திமா கல்லூரியில் கருத்தரங்கம்
- அன்னை பாத்திமா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.
மதுரை
மதுரை மாவட்டம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் உள் தர உறுதி குழுவின் சார்பில் ஆசிரியர் திறன் மேம் பாட்டுப் பயிற்சிக் கருத் தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை யில் தாங்கி பேசியதாவது:-
உயர் கல்வி நிறுவனங் களின் தர மதிப்பீட்டை உறுதி செய்யும் குழு, பாடத் திட்ட அம்சங்கள், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, உள் கட்ட மைப்பு, மாணவர் ஆதரவு, ஆளுமை, நிறுவன மதிப்பு கள் போன்ற 7 அளவு கோல் களின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, இந்தியா முழுவதும் உள்ள பல் கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டு வழங்கும் மதிப் பெண்கள் அடிப்படையில் தர மதிப்பீடு சான்றிதழ் வழங்கி வருகிறது. இது போன்ற பயிற்சிக் கருத் தரங்கம் மூலம் பேராசிரி யர்கள் தங்களை மேம் படுத்தி கொள்ளவும், கல்லூ ரியின் தரத்தை உயர்த்தி கொள்ளவும் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை என். எம். ஆர். சுப்புராமன் பெண்கள் கல்லூரி ஆங் கில துறை பேராசிரியர் சிவப்பிரியா தேசிய தர மதிப்பீட்டின் ஏழு அம்சங் கள் குறித்து தெளிவான விளக்கத்தினை எடுத் துரைத்தார். பின்னர் பேராசிரியர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கத் தினை அளித்தார்.
முன்னதாக கல்லூரி யின் ஆங்கிலத் துறை தலைவரும், உள் தர உறுதி குழுவின் ஒருங்கிணைப் பாளருமான பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் வணிக மேலாண்மை துறை இயக்கு னர் பேராசிரியர் நடேச பாண்டியன், கல்விசார் நெறியாளர் டாக்டர் நாசர், துறை தலைவர்கள் டாக்டர் முனியாண்டி, பால்ராஜ், டாக்டர் கார்த்திகா, சீனி வாசன், சி.எஸ். கார்த்திகா, சுபஸ்ரீ, தனலட்சுமி, உள் தர உறுதிக் குழுவின் உறுப்பி னர்கள் ஜஸ்டின், சசிகலா உள்ளிட்ட 60-க்கும் மேற் பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். இதற்கான ஏற் பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.