- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
- இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) வணிகவியல், கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "தொழில்முனைவோருக்கான வணிக வாய்ப்புகள்" என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது. பாத்திமா கல்லூரி முதுகலை வணிக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியை சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் தொழில் முனைவோருக்கான தகுதிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். செயலாளர் விஜயராகவன் பேசினார். முதல்வர் ராமசுப்பையா, வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவி சுஜிதா பாலா வரவேற்றார். துறைத் தலைவி நாகசுவாதி விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவிப் பேராசிரியைகள் மஞ்சுளா மற்றும் பாபி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி ஷானு நன்றி கூறினார்.