அருள் ஆனந்தர் கல்லூரியில் விளையாட்டு விழா
- அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா நடக்கிறது.
- உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.
மதுரை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் 54-வது ஆண்டு விளையாட்டு விழா போதை பொருள்களுக்கு எதிரான மாணவர்களின் உறுதிமொழியுடன் தொடங்கியது. கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான இன்னாசி வரவேற்றார்.
இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி முன்னாள் மாணவரும் (பழனி)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
இக்கல்லூரி அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகிறதை ஒரு முன்னாள் மாணவனாக கண்டு மகிழ்கிறேன். மேலும் மாணவர்கள் சமுதாய அக்கறை உள்ளவர்களா கவும் வளர வேண்டும் என்றார். தொடர்ந்து பேசி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
மதுரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசி போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு களும், சான்றிதழ்களும் வழங்கினார்.
கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம் செயலர் அந்தோ ணிசாமி, முதல்வர் அன்ப ரசு, இணை முதல்வர் சுந்தர ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உடற்கல்வி இயக்குநர் வனிதா 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வித்துறைத் தலைவர் வீரபரமேஸ்வரி நன்றி கூறினார்.