மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
- மானிய விலையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் வழங்கினார்.
- தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
மேலூர்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டா ரத்தில் மேலவளவு மற்றும் கேசம்பட்டி, கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் வழங்கினார்.
வேளாண்மை துறை சார்பாக 50 சதவீதம் மானியத்தில் தார்பாலின், பண்ணை கருவிகள், நேரடி நெல் விதைக்கும் கருவி மற்றும் தென்னை நடவு, மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது.
பின்னர் தோட்டக் கலைத்துறை சார்பாக வழங்கப்பட்ட குழித்தட்டு நாற்றுகளை கலெக்டர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநர் ராணி, வேளாண்மை உதவி இயக்குநர் சுபாசாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ரிஜ்வானா பர்வீன், வேளாண்மை அலுவலர் விக்னேஷ் குமார், துணை வேளாண்மை அலுவலர் தனசேகரன், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி தோட்டக்கலை அலுவலர் அப்துல் ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.