- கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தினர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக் கடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தியும், ஆலையை இயக்க தேதியை அறிவிப்பு செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரே சன், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் அடக்கி வீரனன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஸ்டாலின் குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் ஆலை தொடர்ந்து இயங்க ஆய்வு குழு அறிவித்த ரூ.26 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க கோரியும், அரவை செய்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு உடனடி யாக பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும், விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்ட போதும் பீல்டு மேன், கேன் ஆபிசர்களுக்கு சம்பளம் போடாத காரணத்தால் கரும்பு பதிவு செய்யாமல் ஆலையை முடக்கியதை கண்டித்தும், தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ஆலை துணைத் தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.