உள்ளூர் செய்திகள்

தைலக்காப்பு உற்சவத்துக் காக அழகர்மலைக்கு புறப் பட்ட சுந்தரராஜ பெருமாள்.

நூபுர கங்கையில் நீராடி அருள்பாலித்த சுந்தரராஜ பெருமாள்

Published On 2023-10-26 08:33 GMT   |   Update On 2023-10-26 08:33 GMT
  • அழகர்கோவிலில் இன்று தைலக்காப்பு உற்சவ விழா நடந்தது.
  • நூபுர கங்கையில் நீராடி சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தைல காப்பு திருவிழா வருடம் தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தைலக்காப்பு உற்சவ விழா 24-ந்தேதி தொடங்கியது. அன்று மாலையில் மேஷ லக்க னத்தில் நவநீத கிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவம் தொடங்கியது.

நேற்று (25-ந்தேதி) கோவிலில் உள்ள மீட்டு கிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் எழுந்தருளி அருள் பாலித்தார். இன்று 3-ம் நாள் திருவிழாவாக காலை 7.31 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெரு மாள் பல்லக்கில் எழுந்தருளி சகல பரிவாரங்களுடன் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் மலைமேல் உள்ள நூபுர கங்கைக்கு புறப்பாடானார்.

தொடர்ந்து அழகர்மலை, நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் நிறுத்தப்பட்டு விசேஷ பூஜைகள் தீபாரா தனைகள் நடை பெற்றது. பின்னர் அங்கிருந்து புறப் பாடாகி நூபுர கங்கைக்கு காலை 12 மணிக்கு மேல் சென்று ராக்காயி அம்மன் கோவிலில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் தைல காப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பெருமாளுக்கு திருதைலம் சாத்தப்பட்து அங்குள்ள தீர்த்த தொட்டி யில் தீர்த்தவாரி நடைபெற் றது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக கோவிலில் இருந்து மலைக்கு புறப்பட்ட பெருமாளுக்கு வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர் கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் மாதவி மண்டபம் உள்ளிட்ட உள் பிரகாரம் முழுவதும் சுமார் 500 கிலோ பழ வகைகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி அண்ணாச்சி, மற்றும் 200 கிலோ வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

தைலக்காப்பு உற்சவம் முடிவடைந்தவுடன் மாலையில் பெருமாள் மேளதாளம் முழங்க தீவட்டி பரிகாரங் களுடன் மலையில் இருந்து கோவிலுக்குள் சென்று போய் இருப்பிடம் சேருகின்றார்.

விழாவிற்கான ஏற்பாடு களை தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய் திருந்தனர். தைலக்காப்பு உற்சவத்தை பக்தர்கள் காணும் வசதிக்காக அழகர் கோவில் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags:    

Similar News