மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு
- மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மதுரை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவங்களை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், ஒன்றிய கழக செயலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். புதிய உறுப் பினர்கள் படிவங்களை அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலா ளர்கள் வெற்றி செழியன், கார்சேரி கணேசன், வாசு என்ற பெரியண்ணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், வக்கீல் ஜீவானந்தம், அவனியாபுரம் முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு, மேலூர் சரவணகுமார் ,மற்றும் மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைத் தலைவர் கவுரி சங்கர், சேனாபதி, ஒத்தக்கடை ராஜேந்திரன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா கூறியதாவது:-
இந்த இயக்கத்தின் ஆணி வேர்கள் தொண்டர்கள் தான். அம்மா இருந்தபோது ஒன்றரை கோடி தொண் டர்கள் இருந்த இந்த இயக்கத்தை, 2 கோடி தொண்டர்களாக உருவாக்கிட எடப்பாடியார் திட்டங்களை வகுத்து வருகிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங் குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய 3 தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைவரும் இந்த இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஒவ் வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயித்து, 3 தொகுதிகளிலும் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த உறுப்பினர் சேர்க்கை மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை உருவாக்க சிறப்பாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.