மாணவிகள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை
- மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திருவிளக்கு பூஜையில் மாணவிகள் பங்கேற்றனர்.
- மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலனுக் காக ஆடி வெள்ளியை யொட்டி 1,008 திருவிளக்கு பூஜை அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். கல்லூரி தலைவர் ராஜ கோபால், உதவி தலைவர் ஜெயராம், கல்லூரி செயலாளர் விஜய ராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் (பொறுப்பு) பிரபு, அறக்கட்டளை உபயதாரர் மகாலட்சுமி தர்மராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப் பாளராக மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து 1,008 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் தலைமையில் கல்லூரி மாணவிகள், பேரா சிரியைகள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். விழாஏற்பாட்டினை கல்லூரியின் பொருளாதார துறை உதவி பேராசிரியை விஷ்ணு சுபா, தமிழ்துறை உதவி பேராசிரியை பரிமளா ஆகியோர் செய்திருந்தனர்.