விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் நிதி உதவி
- விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் நிதி உதவி வழங்கினர்.
- காளிதாஸ் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மதுரை
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ் (27) நேற்று உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி கீதா (24), மகன்கள் புகழ்அறிவு (3), கவி (1) ஆகியோர் உள்ளனர்.
விபத்தில் கணவனை பறிகொடுத்து நிற்கதியற்று நின்ற குடும்பத்திற்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்தது. மாநில பொது செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன், துணை செயலாளர் உதய குமார், துணைத்தலைவர் குணா ஆகியோர் உடனடி யாக வால்பாறைக்கு புறப்பட்டுசென்றனர்.
அங்கு கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
விபத்தில் இறந்த காளிதாசுக்கு தர்மபுரி சொந்த ஊராகும். உடலை அங்கு கொண்டு செல்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இக்கட்டான சூழ்நிலையில் காளிதாஸ் குடும்பத்திற்கு, சங்கம் சார்பில் முதல் கட்டமாக ரூ. 37 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதற்கான காசோ லையை நிர்வாகிகள் காளிதாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை காளிதாஸ் குடும்பத்தினர் கண்கலங்க பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.