உள்ளூர் செய்திகள்

குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்

Published On 2023-01-07 06:14 GMT   |   Update On 2023-01-07 06:14 GMT
  • அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
  • அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலூர்

மேலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாவினிப்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று கூறி இந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.

மேலும் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறி மேலூர்- காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்பும் நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

இருந்த போதிலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் முறையாக வழங்க வில்லை எனக்கூறி 6 மற்றும் 7-வது வார்டு கிராமமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழுவின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யர் முன்னிலையில் வருகிற 9-ந்தேதி நாவினிப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற கோரி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அப்போதாவது தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News