உள்ளூர் செய்திகள்

விஜய் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணாபுரம் காலனி சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்தை விஜய் அன்பன்கல்லணை தொடங்கி வைத்தார். அருகில் விஜய், முத்துக்குமார், ஈஸ்வரன், கருப்பு, சிவக்குமார், பிரேம், அழகுபாண்டி ஆகியோர் உள்ளனர். 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-06-22 09:40 GMT   |   Update On 2022-06-22 09:40 GMT
  • இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
  • மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மதுரை

நடிகர் விஜய் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லானை தலைமையில் இன்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதன்படி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில், புனித அன்னை தேவாலயம், கோரிப்பாளையம் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

தொடர்ந்து திருநகரில் உள்ள கருணை இல்லத்தில் தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ராம்பாலாஜி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு வாசல் முதியோர் இல்லத்தில் மாநகர இளைஞரணி நிர்வாகி நட்ராஜ் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட நிர்வாகி முத்துக்குமார் ஏற்பாட்டில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகனாகுளத்தில் ஹரி, பாண்டி பிரேம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது. அரும்பனூரில் மூர்த்தி ஏற்பாட்டில் நோட்டுப்புத்தகம், அன்ன தானம் வழங்கப்பட்டது.

மதுரை கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆண்டார்கொட்டாரத்தில் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி, மாணவர்கள் 100 பேருக்கு நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் வடக்கு மாவட்டத்தலைவர் விஜய் அன்பன் கல்லாணை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மாலையில் மத்திய 3-ம் பகுதி ஏற்பாட்டில் கேக் வெட்டி நோட்டுப்புத்தகம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் ஏற்பாட்டில் பொன்மேனி முதியோர் இல்லத்தில் மதிய உணவு, நாகமலை புதுக்கோட்டை நித்திஷ், கண்ணன், செந்தில் ஏற்பாட்டில் அன்னை ஆசிரம முதியோர்களுக்கு இரவு உணவு, மதிச்சியம் ரகு ஏற்பாட்டில் செனாய் நகர் குழந்தைகள் காப்பகத்தில் இரவு உணவு, நோட்டுப்புத்தகம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News