உள்ளூர் செய்திகள்

பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-07-10 09:31 GMT   |   Update On 2022-07-10 09:31 GMT
  • பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை காளிமுத்து நகர் பாண்டியன் மனைவி அஸ்மா (வயது 50). இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அஸ்மா காலை வீட்டில் இருந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தெப்பக்குளம், காமராஜர் சாலை சுடலைமுத்து தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் முத்துப்பாண்டி (22). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துபாண்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். க தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News