உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-04-19 08:16 GMT   |   Update On 2023-04-19 08:16 GMT
  • சமயநல்லூர் மின் கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
  • 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப்பணிகள் செய்வதில்லை.

வாடிப்பட்டி

சமயநல்லூர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் அலங்காநல்லூர் மின்பாதை ஆய்வாளர் ராமநாதன், கேங்மேன் சுரேஷ் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொறுப்பாளர் அறிவழகன் தலைமையில் தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், தொழிலாளர் சம்மேளன சங்கம், அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்புச் சங்கம், அட்டைப்பெட்டி பிரிவு அலுவலர்கள் சங்கம் அ.தி.மு.க. தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன் காரணமாக அலங்காநல்லூர் துணை மின் நிலையத்திற்கு மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள் செல்ல மாட்டார்கள் என்றும், மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் துணை மின் நிலையம் பூட்டப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். சமயநல்லூர் கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, சோழவந்தான், அய்யங்கோட்டை, அலங்காநல்லூர் உள்ளிட்ட 10 கிளை அலுவலகங்களில் வசூல் மற்றும் களப்பணி மற்றும் அவசரப் பணிகள் செய்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News