உள்ளூர் செய்திகள்

 சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.. இன்று காலை முதல் கால பூஜை தொடங்கியது. பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்தனர். இடம்: நெசவாளர் காலனி சிவன் கோவில்

சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் கோலாகலம்

Published On 2023-02-18 09:41 GMT   |   Update On 2023-02-18 09:41 GMT
  • இந்த வருடத்தின் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.
  • சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள்.

தருமபுரி,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக மகா சிவராத்திரி உள்ளது. இதையடுத்து இந்த வருடத்தின் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.

வருடத்தில் எத்தனையோ ராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது.

அதனால் இன்று முழுவதும் (இரவு 12:00 முதம் 6:00 வரை) ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும் என்று ஆன்மீகவாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.

இன்று சிவனுக்கு பிடித்த மந்திரமான "ஓம் நமசிவாய" மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நாம் நினைத்ததை பெறலாம் என்பது ஐதீகம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம், பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது நம்பிக்கை.

சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும்.

சிவராத்திரியை முன்னிட்டு தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில், புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவில், தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவிில், குமார சாமிப் பேட்டை சிவகாம சுந்தரி உடனா கிய ஆனந்த நடராஜர் கோவிில், ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிில், சித்தி லிங்கேஸ்வரர் கோவில், பழைய தருமபுரி கருணை நாதர் கோவில், புட்டி ரெட்டிபட்டி சோமநாதர் கோவில், சவுலுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஓசூர் அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில், ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

Tags:    

Similar News