நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பேட்டரியை திருடியவர் கைது
- புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர்.
- அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த சுல்தான் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). அரிசி மண்டி உரிமையாளர். இவர் சம்பவத்தன்று தனது கடையின் முன்பு தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
பின்னர் வாகனத்தை வந்து பார்த்தபோது அதில் பேட்டரியை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரபு புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
இதேப்போல் அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (50).டெம்போவை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சம்பத் தன்று இவரது டெம்போவில் மர்ம நபர் யாரோ பேட்டரியை திருடி விட்டார்.
இது குறித்தி காந்தி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில் புளியம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புளியம்பட்டி டானாபுதூர் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்கிற உமா சங்கர் (47) என தெரிய வந்தது. இவர் தற்போது சத்தியமங்கலம் அடுத்த மலையடி புதூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருவதும் இரண்டு வாகனங்களின் பேட்டரியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர். அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.