உள்ளூர் செய்திகள்

சிவகிரி பேரூராட்சி சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்.


சிவகிரி பேரூராட்சி சார்பில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-26 08:21 GMT   |   Update On 2022-06-26 08:21 GMT
  • சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
  • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியும், துணிப்பைகளை (மஞ்சப்பை) பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், பேரூர் கழக செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் விவேகா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய ரதவீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி வலம் வந்து பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் (மஞ்சப்பை) துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பதாகைகள் ஏந்தி பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், 18 வார்டு கவுன்சிலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News