எரவாஞ்சேரியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்ககோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு
- ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.