உள்ளூர் செய்திகள்

கேத்தி, மசினகுடி பகுதிகளில் ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

Published On 2023-05-06 10:00 GMT   |   Update On 2023-05-06 10:00 GMT
  • இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூடலூர்

கேத்தி, மசினகுடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அமைச்சர்கள் திடீரென ஆய்வு செய்தனர். பின்னர் ஆதிவாசி மக்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கினர். ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு  தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். கேத்தி, உல்லாடா, அதிகரட்டி, வாழைத்தோட்டம், மசினகுடி ஆகிய ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கூறியதாவது:- மத்திய அரசு தமிழகத்துக்கு மண் எண்ணை அளவை குறைத்து வழங்கி உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய மண் என்ணை அளவு குறைந்துள்ளது. 2007-ம்ஆண்டு முன்னாள் முதல் - அமைச்சர் மு. கருணாநிதியால் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மானிய விலையிலும் தரமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் மத்திய அரசு மண்எண்ணை வழங்குகிறது. அதை தமிழக அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்குகிறது. கூடலூர் பகுதியில் மின்சார விநியோகப் பிரச்சினை உள்ளதால் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி கூடலூர் பகுதி மக்களுக்கு கூடுதல் மண்ணெண்யை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ திராவிட மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மிர்ஹாசன் முசாபர் இம்தியாஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News