உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் கொரோனா பரவல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திண்டிவனம் பகுதியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்: நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Published On 2022-07-26 08:08 GMT   |   Update On 2022-07-26 08:08 GMT
  • திண்டிவனம் பகுதியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் என்று நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.
  • கொரோனா விதிமீறல்களை கடைபிடித்தல் அவசியம் ஆகிய அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

விழுப்புரம்:

தமிழக அரசு கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தவும், கட்டாய முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், உரிய காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், வியாபாரப் பெருமக்கள், பொதுமக்கள், கொரோனா விதிமீறல்களை கடைபிடித்தல் அவசியம் ஆகிய அறிவுரைகள் வழங்கி உள்ளார். அதனடிப்படையில் திண்டிவனம் பல்வேறு பகுதியில் முக கவசம்அணிவதையே வலியுறுத்தியும் தடுப்பூசிகள் செலுத்தித்துக்கொள்ளவும், மீறுவோர் மீது பொது சுகா–தார சட்டத்தின் படி நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப் படும் என்று திண்டிவனம் நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தெரிவித்தார். மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags:    

Similar News