உள்ளூர் செய்திகள்

கட்டிட பணிகளை பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பில் மயானம் சீரமைப்பு பணி

Published On 2023-08-04 04:49 GMT   |   Update On 2023-08-04 04:49 GMT
  • மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மயானத்தை சீரமைத்து புதிதாக கட்டிடப் பணிகள் மேற்கொள்வத ற்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • மேலும் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி வருவாய் நிர்வாகத்தில் கேரளம் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது போடி மெட்டு.

இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இங்குள்ள மயானம் சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில் பொது மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மயானத்தை சீரமைத்து புதிதாக கட்டிடப் பணிகள் மேற்கொள்வத ற்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கட்டிடப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிதாக கான்கிரீட் தகன மேடை, தியானம் மற்றும் ஓய்வு அறை மற்றும் சுற்றுச்சு வர்கள் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளி கண்ணன் ராமசாமி , செயல் அலுவலர் இளங்கோவன், மற்றும் அலுவலக உதவியாளர்கள் சரவணன், சேகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டுபோடி மெட்டு பகுதியில் நடைபெறும் மயான கட்டிட சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கை கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News