நாமகிரிப்பேட்டையில் 580 மூட்டை மஞ்சள் ரூ.29 லட்சத்துக்கு ஏலம்
- ராசிபுரம் அருகே நாமகி ரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத் தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
- ஆர்.சி.எம்.எஸ். சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் நடந்த ஏலங்களில் 580 மஞ்சள் மூட்டைகள் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகி ரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத் தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்க வுண்டம்பட்டி, நாமகிரிப் பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் ஒடுவன் குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்தி ருந்தனர். இதில் விரலி ரகம் 330 மூட்டைகளும், உருண் டைய ரகம் 100 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.
விரலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 322 முதல் அதிகப்பட்சமாக ரூ.9 ஆயிரத்து 999-க்கும், உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 138-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 312-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 999-க்கும், அதிகப்பட்சமாக ரூ.14 ஆயிரத்து 269-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 450 மஞ்சள் மூட்டைகள் ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போ னதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்
அதேபோல் நாமகிரிப் பேட்டையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 130 மஞ்சள் மூட்டைகள் ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது. இதில் விரலி ரகம் குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரத்து 802 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 705-க்கும் ஏலம் விடப்பட்டது. உருண்டை ரகம் குறைந்த பட்சம் ரூ. 8 ஆயிரத்து 399 முதல் அதிகபட்சமாக ரூ. 8 ஆயிரத்து 802-க்கும் ஏலம் விடப்பட்டது.
இதன்படி, ஆர்.சி.எம்.எஸ். சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் நடந்த ஏலங்களில் 580 மஞ்சள் மூட்டைகள் ரூ.29 லட்சத்து 22 ஆயிரத்து 475-க்கு ஏலம் விடப்பட்டது.