போலி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தவர் கைது
- நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கீரம்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நால்ரோடு பகுதியில் ஒருவர் திருட்டுத்தன மாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் நின்று கொண்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டி ருப்பது தெரியவந்தது.
அவர் வைத்திருந்த அனைத்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளும் போலியா னவை என்றும், வெள்ளைத்தாளில் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கோனூர் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ஜான் கண்ணாடி (வயது 53) என்பதும் அவரிடமிருந்து போலி லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.