உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் பகுதியில் சூறைக்காற்றில் மின் கம்பி உரசியதில் வீட்டில் இருந்த மின் சாதனங்கள் சேதம்
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது.
- குடியிருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்றினால் அப்பகு தியில் உள்ள மரக்கிளையில் மின் கம்பி உரசியது. இத னால் அப்பகுதி குடியி ருப்பில் மின் இணைப்பில் இருந்த யு.பி.எஸ்., டிவி உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்கள் பழுதாயின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து, அங்கு வந்த மின்வாரிய ஊழி யர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின் கம்பியில் உரசிய மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். பேட்டை, நல்லியாம்பா ளையம் மற்றும் சக்ரா நகர் பகுதிகளில் மின் கம்பிகளில் மரக்கிளை உரசி வருவதால் அப்பகுதியில் உள்ள மரக்கி ளைகளை மின்வாரியத்தி னர் அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.