உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூரில் மது விற்ற தந்தை, மகன் கைது
- காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது.
- இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதிகளில் காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பரமத்திவேலூரை சேர்ந்த ராஜலிங்கம் ( 55), இவரது மகன் மணிகண்டன் (24 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார், 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 45 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.