திருச்செங்கோட்டில் கம்பன் விழாவில் பட்டிமன்றம்
- திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது.
- திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான பால தண்டாயுதபாணி வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சஎம்.எல்.ஏ. ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்ட னர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக் கரசு, திருச்செங்கோடு வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்
களின் தாளாளர் சிங்கார வேல் வாழ்த்தி பேசினார்
ராமபிரானின் இதயத்தில் பெரிதும் இடம் பிடித்தவர்கள் உடன் பிறந்தோர், உடன் சேர்ந்தோர் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக ராமச்சந்திரன் பேசினார். உடன் பிறந்தோரே என்ற அணியில் பெருந்துறை ரவிக்குமார், திருப்பூர் தெய்வநாயகி பேசினார்கள். உடன் சேர்ந்தோரே என்ற அணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா ஜெயச்சந்திரன், ராஜபாளையம் உமா சங்கர் பேசினர்.
திருச்செங்கோடு கம்பன் கழக செயலாளர் செங்குட்டுவேல் நன்றி கூறினார்.