வேலூர் பேரூராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
- போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
- இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொதுமக்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரி வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
மேலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.