அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கம்
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவா
- திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பேரவை நிர்வாகிகளுக்கு முதல்வர், பேராசிரியர்கள் ரகுபதி, சரவணா தேவி, ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பிளஸ்-2 படித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார்.
அவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது என்றார்.