உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி
- பரமத்திவேலூர் வட்டத்தில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பம், 1,600 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 600 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200 வரையிலும் ஏலம் போனது. இதே போல் கடந்த வாரம் கரும்பு டன் ஒன்று ரூ.2,300 வரையிலும் விற்பனையானது. வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.