உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசை வழங்கிய போது எடுத்த படம்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் பாண்டமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா

Published On 2023-09-28 07:44 GMT   |   Update On 2023-09-28 07:44 GMT
  • கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பாண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். கபிலர்மலை வட்டார ஆட்மா தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, பாண்ட மங்கலம், பேரூராட்சி தலைவர் டாக்டர் சோம சேகர், துணை தலை வர் பெருமாள் என்கிற முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் சித்ரா மருத்துவ அறிவுரைகள் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சீர்த்தட்டு, புடவை, வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.

முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் மனோஜ் நன்றி கூறினார். விழா விற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை குழந்தை வளர்ச்சித் திட்ட கண்காணிப்பாளர் ஜானகி, மேற்பார்வையாளர்கள் அன்னபூரணம், ராமாயி, மணிமேகலை இளநிலை உதவியாளர் சாந்தி மற்றும் அலுவலக உதவியாளர் முகமதுதாவூத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News