கரும்பு பயிரிடும் விவசாயிகள் வருகிற 15-க்குள் பதிவு செய்ய வேண்டும்
- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கரும்பு அரவை
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்திற்கு இதுவரை 4,270 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டு இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள், அந்தந்த பகுதி கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்ற 15-ம் தேதிக்குள் விடுபடாது பதிவு செய்துகொள்ளலாம்.
சொட்டுநீர் பாசனம்
கரும்பு விவசாயிகளுக்கு நடப்பாண்டில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 375 எக்டர் பரப்பளவில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
நடவு பருவத்தில் அதிக அளவில் அகல பார் முறையில் 4.5 அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து பயன்பெறலாம். எனவே கரும்பு விவசாயிகள் அனைத்து அரசு திட்டங்களையும், பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை கரும்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.