உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை

Published On 2023-08-09 07:55 GMT   |   Update On 2023-08-09 07:55 GMT
  • தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
  • இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல்:

தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News