நாமக்கல் மாவட்டத்தில் தலைமறைவான கைதிகள் 10 பேர் சிக்கினர்
- தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்:
தமிழக முழுவதும் பிடிவாரண்ட் கைதிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து தமிழகம் முழுவதும் தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 10-க்கும் மேற்பட்ட கைதிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள 60 பேரை பிடிக்க போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.