கொள்ளையர்களை பிடிக்க 2 தனி படை அமைப்பு
- நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
- வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).
துணை வட்டார
வளர்ச்சி அதிகாரி
இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
பீரோ திறந்து கிடந்தது
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.
28 பவுன் நகை
அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
2 தனிப்படைகள்
நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.