அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் காலதாமதம் இன்றி சம்பளம் பட்டுவாடா
- நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
- அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சம்பளம் தரவில்லை என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இது குறித்து நேற்று அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களையும், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மகளிர் சுய உதவி குழு மூலம் துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் தூய்மை பணியாளர்கள் அனைவருமே சம்பள பாக்கி எதுவும் இல்லை. சம்பள தொகை வங்கிக் கணக்கில் கடந்த 5-ந் தேதி வந்துவிட்டது என தெரிவித்தனர்.
இதனால் பணியாளர்க ளுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என சம்பள பாக்கி உள்ளதாக வாட்ஸ் அப் குழுவில் வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு விடம் கேட்டபோது:-
வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சம்பள பாக்கி என வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் . அது முற்றிலும் தவறான தகவல். தூய்மை பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பள பாக்கி நிலுவையில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.