உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ராஜேந்திர பிரசாத் பேசிய காட்சி. 

நெல்லை- பாபநாசம் சாலைப்பணியை துரிதப்படுத்த வேண்டும்- சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-07-22 09:26 GMT   |   Update On 2022-07-22 09:26 GMT
  • சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் வீரவநல்லூர் உதயமார்த்தாண்டபுரம் அரசு பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கபப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி:

சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தயாசங்கர், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத் தலைவர் ராம்ராஜ் பாண்டியன், அரசாங்க பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன், மாவட்ட மகளிர் அணி தலைவி மீனாட்சி, மகளிரணி துணைத்தலைவர் சந்தானலட்சுமி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வீரவநல்லூர் உதயமார்த்தாண்டபுரம் அரசு பொது கழிப்பறையை சீரமைக்க வேண்டும், நெல்லை- பாபநாசம் சாலைப்பணியை துரிதமாக முடித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க நெடுஞ்சாலைதுறையில் மனு கொடுக்க வேண்டும்.

மாவட்ட தலைவர் தலைமையில் சொத்துவரி அதிகரிப்பு, மின்கட்டணம் உயர்வு ஆகியவற்றை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும், வீரவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய கட்டிடத்தை மகளிருக்கு தனியாக பள்ளி செயல்படுத்தி அதிகாரிகளை கேட்டு கொள்வது,

பூமிநாதசாமி கோவில் ரதவீதியை தேர் ஓடும் அளவுக்கும் அகலபடுத்திடவும், கல்லிடைக்குறிச்சி குலசேகரபெருமாள் கோவிலை புணரமைத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டு, கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளிடம் மனு செய்து ஆவண செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கல்லிடைக்குறிச்சி நகர தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர்கள் ஆதிநாராயணன், முத்துராமன், வீரவநல்லூர் நகர தலைவர் சங்கரலிங்கம், விவசாய அணி ஒன்றிய தலைவர் பண்டாரம், ஒன்றிய துைணத்தலைவர் ராஜகோபாலன், சபரிநாத், அரசாங்க பிரிவு மாவட்ட செயலாளர் முருகேஷ்வரன், அரசாங்க பிரிவு அம்பை நகர தலைவர் ராமர்பாண்டியன், சேரை ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் மகாராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பொதுச்செயலாளர்கள் அருணாசலம், சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.

பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதால் மாவட்ட தலைவர் தலைமையில் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வண்ணம் சிறிது தூரம் ஊர்வலம் சென்றனர்.

Tags:    

Similar News