உள்ளூர் செய்திகள்

புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை சண்முகையா எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

ஓட்டப்பிடாரம் அருகே கோவில்பட்டி-வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வரை புதிய பஸ் சேவை- சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Published On 2022-11-25 09:38 GMT   |   Update On 2022-11-25 09:38 GMT
  • விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
  • ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சண்முகையா எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம்:

கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை அரசு பஸ் வந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் வாஞ்சிமணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் சேவை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்க ளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனை நிர்வாகம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்காதவாறு அனைவரும் நடந்து கொள்ளும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி தொ.மு.ச செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் பிரேமா, அய்யாத்துரை மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News