சிறுத்தலைக்காடு- நாகைக்கு புதிய பஸ் சேவை தொடக்கம்
- சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.
- புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா சிறுத்தலைகாடு மீனவ கிராமத்தில் இருந்து நாகைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழழ நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கருப்பம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமை வகித்தார்.
தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன் பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக வேதாரண்யம் கிளை மேலாளர் எழில், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் கருணாநிதி, வார்டு கவுன்சிலர் ஐஸ்வர்யா, மாவட்ட பிரதிநிதி பாபு, சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் முருகேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.
புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ் சிறுத்தலை காட்டில் இருந்து காலை 8 மணி, 10:30 மணி, மாலை 3 மணி என மூன்று முறை கருப்பம்புலம், நெய்விளக்கு நால்ரோடு, வேதாரண்யம் வழியாக நாகைக்கு தினசரி மூன்று முறை இயக்கப்படும் என கிளை மேலாளர் தெரிவித்தார்.