உடன்குடி பேரூராட்சியில் ரூ.26 லட்சத்தில் புதிய சாலை பணி தொடக்கம்
- உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
- உடன்குடி பேரூராட்சி துணைத்தலைர் சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சியில் பொது நிதித்திட்டத்தின் மூலம் ரூ.26.10 லட்சத்தில் 2 தெருக்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சோமநாதபுரம் வடக்குத் தெரு, வில்லிகுடியிருப்பு விநாயகர் காலணி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா தலைமை தாங்கினார். உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவரும், நகர தி.மு.க. செயலருமான சந்தையடியூர்மால்ராஜேஷ் பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் உமா, மும்தாஜ்பேகம், பிரதீப் கண்னண், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் சலீம், முன்னாள் நகர தி.மு.க. செயலர் கனகலிங்கம், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்டப் பிரதிநிதி ஹீபர் மோசஸ், தி.மு.க. நிர்வாகிகள் கணேசன், மனோ, கணேஷ், நாராயணன், தங்கம், திரவியம், உதயசூரியன், ஷேக் முகம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.