உள்ளூர் செய்திகள்

விழாவில் கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த போது எடுத்தபடம். அருகில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-09-04 09:27 GMT   |   Update On 2023-09-04 09:27 GMT
  • நெல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை, ெநல்லை விற்பனைக்குழு சார்பில் 1000 மெட்ரிக் டன் கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News