உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க புதிதாக போர்வெல்

Published On 2022-06-10 10:22 GMT   |   Update On 2022-06-10 10:22 GMT
  • வடவள்ளி யானைமடுவு பகுதியில் அமைத்தனர்
  • 3 தண்ணீர் தொட்டிகள் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

வடவள்ளி,

மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியான ஓணாப்பாளையம் அடுத்த யானைமடுவு வனப்பகுதி உள்ளது. கனுவாய், நரசீபுரம் உள்பட பல்வேறு வனப்பகுதியில் இருந்து இடப்பெயர்ச்சி அடையும் வன விலங்குகள் யானைமடுவில் வருகிறது.

இது வனவிலங்குகள் இடம் பெயர்ச்சியின்‌ போது தங்கி இளைப்பாறி செல்லும் இடம் ஆகும். அதற்கான சூழ்நிலையும் இங்கு நிலவுகிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊர்களுக்கும் நுழைகிறது.

இதனை தடுக்க இந்த பகுதியில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 3 தண்ணீர் தொட்டிகள் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் தண்ணீர் நிரப்ப போர்வெல் அமைத்து சோலார் மின்சாரம் மூலம் தண்ணீர் தொட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டும், சோலார் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல முடியாமல் வனத்தில் தண்ணீர் தொட்டி யில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தினமும் தண்ணீர் குடிக்க வரும் காட்டு எருமை, யானை , மான் , மயில் போன்ற வன விலங்குகள் தாகம் தணிக்க முடியாமல் அவதி பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிதாக போர் அமைக்கும் பணியை வனத்துறையினரால் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வந்தது. நேற்று மாலை நிறைவடைந்தது. இதனால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைக்கும்.

Tags:    

Similar News